தீராத பிரச்னைகள் தீர சென்னை குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டை படவேட்டம்மன் கோயிலில் விளக்கு பூஜை! | vilakku poojai at zameen royapettah chrompet padavettamman temple

Spread the love

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபட வாழ்க்கை வளமாகும். அன்னையின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். பிள்ளைகளின் கல்வி, தொழில், வேலை, திருமணம் போன்ற விஷயங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாருங்கள் அற்புதமான அந்த அன்னையின் சந்நிதியில் விளக்கேற்றி வழிபாடு செய்வோம்.

இந்த விளக்கு பூஜையை சக்தி விகடன் மற்றும் ஜமீன் ராயப்பேட்டை படவேட்டம்மன் ஆலய நிர்வாகமும் இணைந்து நடத்துகிறார்கள். இந்த நிகழ்ச்சியை ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் வழங்குகிறார்கள். மேலும் இந்த நிகழ்வை தீபம் லேம்ப் ஆயில், சக்தி மசாலா மற்றும் கோபுரம் மஞ்சள் மற்றும் குங்குமம் இணைந்து வழங்குகிறார்கள்.

ஜமீன் ராயப்பேட்டை படவேட்டம்மன் கோயில்

ஜமீன் ராயப்பேட்டை படவேட்டம்மன் கோயில்

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 044-66802980/9677069112

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!*

* படிவத்தில் உங்கள் தகவல்களைப் பதிவு செய்தலே போதுமானது. வேறு பதில் செய்தி ஏதும் வரவில்லை என்று கவலைப்பட வேண்டாம். ஆலய வளாகத்தில் சந்திக்கலாம். நன்றி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *