பிரமாண்ட கான்கிரீட் கோபுரங்கள்; சுண்ணாம்புக்கு பதில் சிமென்ட்; மதிப்பீடு 737.08 லட்சம் | அணை ஓசை 22

Spread the love

முன்பு திட்டமிட்டதற்கு மாறாக, இறுதி வடிவத்தில் கீழ்க்கண்ட முக்கிய சிறப்பு அம்சங்களை கொண்டதாக திட்டம் திருத்தி அமைக்கப்பட்டது.

1. அணைச்சுவற்றின் மேல் புறம் முழு நீளத்துக்கும் வாகனங்கள் சென்றுவரும் வசதி கிட்டும். இது கடல் மட்டத்திலிருந்து +801.0 அடி MSL ஆக இருக்கும்.

2. மூன்றரை அடி உயரச் சுவர் அந்த சாலைக்கு இருபுறமும் பாதுகாப்பிற்காக உயர்ந்து நிற்கும். இதன் உயரம் + 804.5 MSL.

3. முழு நீர் கொள்ளளவு + 796.0 MSL-ல் அமையும். தேவையெனில், மேலும் இரண்டரை அடி உயரம் அதிகப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

4. இந்த அளவுக்கு அதிகமான அளவு நிரம்பினாலும் அணையின் வலது பக்கக் கரையில் மேலும் அதிகமாக வரும் உபரி நீர் வழிந்து ஓட பாதுகாப்பான அம்சம் நிறுவப்பட்டது.

5. எதிர்காலத்தில் அணையில் சுவற்றை மேலும் அதிகபட்சம் 10 அடி உயரப்படுத்தி கொள்ள முடியும். அதற்கேற்ற வகையில் அணை பலமாக அமைக்கப்படும்.

இது ஒருவேளை பத்து அடிகள் அளவுக்கு அணையில் தூர் படிந்தால் தேங்கி நிற்கும் நீரின் அளவு குறையாமல் இருக்க இப்படி செய்து கொள்ள முடியும் என்று வசதி தரப்பட்டிருக்கிறது!

6. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு எவ்வித இடர்பாடுமின்றி அணை உறுதியாக தாங்கி நிற்கும் படி வடிவமைப்பு மாற்றப்பட்டு திட்டமிடப்பட்டது.

7. உபரி நீர் வெளியேற அமைக்கப்படும் “எல்லீஸ் வளைவு” பாலத்தின் மதகுகளின் அடிப்பகுதி +770 MSL அடியாக இருக்கும்.

8. இதனால் 26 அடி நீர் “சில்” எனப்படும் மதகுகளின் அடிப்பகுதியில் இருந்து மேல் புறம் வரை நிரம்பி நிற்கும். இந்த நிலை அணையின் அதிகபட்ச நீரின் உயரத்திற்கு சமமாக இருக்கும். மதகு 20 அடி உயரம் கொண்டதாக இருக்கும்.

8. நீர்ப்பாசன மதகுகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதற்கு மிகப்பெரிய குழாய்கள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு நீர் மின் நிலையம் வழியாக மின்சாரம் தயாரிக்கப்படும்.

9. மேலும், உயர்மட்ட மதகுகள் 8 எண்ணிக்கையிலும், கீழ்மட்ட மதகுகள் ஐந்து எண்ணிக்கையிலும் அமையும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *