பின்னர், தன் கைகளை நெஞ்சுக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, அனிமேஷன் படங்களில் வரும் கோபக்காரக் கதாபாத்திரங்களைப் போல அச்சு அசலாக மனித பாணியில் அமர்ந்திருக்கிறது.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் குவித்து வருகிறது. கியோமசாவின் இந்த மனிதத்தன்மையுள்ள கோப முகபாவனையைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை நகைச்சுவையாகப் பகிர்ந்து வருகின்றனர்.
“சண்டை என்று வந்துவிட்டால் மனிதர்களாக இருந்தாலும் கொரில்லாவாக இருந்தாலும் ஒரே மாதிரியாகத்தான் கோபித்துக் கொள்கிறார்கள்” என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.