தமிழகத்தில் காலியான ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை தங்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸூக்கு கொடுத்திருக்கிறது தவெக.
காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்ரவர்த்தி எம்.பி தேர்தலுக்கு போட்டியிடுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரவீன் சக்ரவர்த்தி நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில், ” தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்த ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.