பிரார்த்தனை கூடமா, மசூதியா? – தாவூத் குடும்பம் வசித்த கட்டடத்தை அடியோடு இடிக்கும் மும்பை மாநகராட்சி | The Municipal Corporation completely demolishes the building where Dawood’s family once resided.

Spread the love

இது தொடர்பான பிரச்னை வக்பு வாரிய தீர்ப்பாயத்தில் இருக்கிறது. இதனை இடிக்க சுப்ரீம் கோர்ட்டும் தடை விதித்து இருக்கிறது. ஆனால் சாலை விரிவாக்க பணிகளுக்காக அதனை இடிக்கப்போவதாக கடந்த 16 ஆம் தேதி மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதில் பிரார்த்தனை மண்டபத்தை பயன்படுத்துபவர்கள் மாற்று இடத்திற்கு மாற்றிக்கொள்ளுமாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை விரிவாக்க பணிக்காக அதனை அகற்ற முடிவு செய்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை இடிப்பதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்டிடம் இன்று அல்லது நாளை இடிக்கப்பட இருக்கிறது.

இது குறித்து ஏ.ஐ.எம்.ஐ.எம். முன்னாள் எம்.எல்.ஏ.வாரீஸ் பதான் கூறுகையில்,”‘உச்ச நீதிமன்றம் மற்றும் வக்பு தீர்ப்பாயம் தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பை வெளியிடுவது சட்டவிரோதமானது. அதில் இருப்பது 140 ஆண்டுகள் பழமையான மசூதி. இதை மசூதி என்று அடையாளப்படுத்தியதற்காக புல்டோசரை கொண்டு செல்ல முடியாது. எங்களுக்கு பதிலளிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். மாநகராட்சியின் முடிவு தன்னிச்சையானது”என்று தெரிவித்தார்.

இது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. அமின் பட்டேல் கூறுகையில்,”2024-25 வரை செல்லுபடியாகும் உச்சநீதிமன்றம் மற்றும் வக்பு தீர்ப்பாயத்தின் தடை உத்தரவுகள் இருந்தபோதிலும், கட்டாய ஏழு நாள் அல்லது 15 நாள் அறிவிப்பு அவகாசம் கூட கொடுக்காமல் மாநகராட்சி நிர்வாகம் இடிக்க முடிவு செய்துள்ளது”என்று குற்றம் சாட்டினார். இந்த கட்டிடம் இடிக்கப்படுவதன் மூலம் தாவூத் இப்ராகிமின் கடைசி நினைவுகளும் மும்பையில் இருந்து அகற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாவூத் இப்ராகிம் வசித்த கட்டடத்தை இடித்துவிட்டு அதில் புதிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடம் கட்ட முஸ்லிம் டிரஸ்ட் ஒன்று அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *