தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை; குற்றவாளியைத் தேடும் போலீஸ்!| Nellai: 80-Year-Old Woman Sexually Assaulted While Bathing in Thamirabarani River; Police Search for Accused

Spread the love

.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் மருதம்நகரைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி தினமும் அதிகாலையில் எழுந்ததும் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் செல்வது வழக்கம். அவரது நடவடிக்கையை கண்காணித்த மர்ம நபர், அதிகாலையில் மூதாட்டியை வழிமறித்துள்ளார். என்ன என்று புரியாமல் திகைத்து நின்ற மூதாட்டியின் முகத்தை துண்டால் மூடிய நபர், அவரை புதருக்குள் தள்ளி இழுத்துச் சென்றுள்ளார். அலறித் துடித்த மூதாட்டியை அடித்து அச்சுறுத்திய நபர், அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

அதிகாலை நேரத்தில் அப்பகுதியில் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஓடிச் சென்றுள்ளனர். அவர்கள் வருவதை அறிந்ததும் அந்த மர்ம நபர், அங்கிருந்து தப்பியோடி விட்டார். மூதாட்டியை முள்புதருக்குள் தள்ளிவிட்டதால் அவரது உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து விரைந்து வந்த போலீஸார் மூதாட்டியை மீட்டு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *