பிரிட்டன் அரசியலில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், லேபர் கட்சியின் கீர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (திங்கள்கிழமை) அறிவித்தார்.
பிரிட்டன் அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ள இந்த முடிவைத் தொடர்ந்து, லேபர் கட்சியின் அடுத்த தலைவராகவும், பிரிட்டனின் அடுத்த பிரதமராகவும் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பொறுப்பேற்க அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
யார் இந்த ஆண்டி பர்ன்ஹாம்?
வடமேற்கு இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் 1970-ல் பிறந்து வளர்ந்த இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்று, தனது 15 வயதிலேயே லேபர் கட்சியில் இணைந்தவர் ஆவார்.
2001-ல் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வான இவர், தொடர்ந்து டோனி பிளேயர் மற்றும் கார்டன் பிரவுன் அமைச்சரவைகளில் உள்துறை, நிதித்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகிய முக்கிய அமைச்சகங்களில் மூத்த பொறுப்புகளை வகித்தார்.