“பிரிண்ட் அவுட் எடுத்து படிக்க 3 நாட்கள் எதற்கு? Prepare well.!”- முதல்வர் பேச்சு; உதயநிதி விமர்சனம்| Udhayanidhi stalin criticizes vijay tn assembly speech

Spread the love

சர்காரிய கமிஷனில் இருப்பதை பார்ப்போம். வீராணம் திட்டத்தில் சத்யநாராயணா பிரதர்ஸ் ஒப்பந்தம் எடுக்க மாறன் இரண்டரை சதவீத கமிஷன் கேட்டதாக அந்த கோப்பில் இருக்கிறது. அந்த அறிக்கை வந்து பொன் விழாவே வந்துவிட்டது.

1970-74 வரை தவணை முறையில் 29 லட்சம் கமிஷன் வாங்கப்பட்டதாக அந்த கோப்பில் இருக்கிறது. கலைஞர் மீது எனக்கு பெரிய மரியாதை இருக்கிறது. இதெல்லாம் நான் சொல்லும் குற்றம் இல்லை. அமலாக்கத்துறை சொல்லும் குற்றச்சாட்டு” என்று திமுகவை கடுமையாகப் பேசியிருந்தார்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இந்நிலையில் முதல்வர் விஜய்யின் பேச்சு குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு?

பதிலற்ற பதிலுரை – பழிபோடும் பேச்சு – diversion tactics – மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM. எதிர்க்கட்சியின் பதிலைக் கேட்க பயந்து மீண்டும் ஒளியாமல், prepare well next time.Try to do better!” என்று விமர்சித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *