Cricket
oi-Yogeshwaran Moorthi
சென்னை: மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சிஎஸ்கே அணி சிவம் துபே மற்றும் டிவால்ட் பிரெவிஸ் ஆகியோரை கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் பிரெவிஸ்க்கு பதிலாக சிஎஸ்கே அணி நிர்வாகம் வில் ஜாக்ஸை கேட்டிருக்கிறது. இதனால் மும்பை அணி நிர்வாகம் மீண்டும் ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மீண்டும் கோப்பையை வெல்வதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. கடந்த 3 சீசன்களாக சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் சீனியர்களை கொஞ்சம் ஓரம்கட்டிவிட்டு இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணியின் பிராண்ட் மதிப்புக்கு ஏற்ற வீரர்களை கண்டறியவும் தீவிரமாக உள்ளது.

அதற்கேற்க கடந்த சீசனில் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி டிரேட் செய்து கொண்டு வந்தது. தற்போது அடுத்தக் கட்டமாக ஹர்திக் பாண்டியா மீது சிஎஸ்கே அணி நிர்வாகம் கண் வைத்துள்ளது. மும்பை அணியில் இருந்து விலகும் முடிவை ஹர்திக் பாண்டியா கடந்த சீசனில் பாதி போட்டிகள் முடிவடைந்த போதே எடுத்துவிட்டார். மும்பை அணியும் ஹர்திக் பாண்டியா மீது நம்பிக்கை வைக்கவில்லை.
இதனால் வேறு அணிக்கு செல்லும் முடிவுக்கு ஹர்திக் பாண்டியா வந்துள்ளார். அவரை ரிலீஸ் செய்வதால், மும்பை அணிக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இதனால் டிரேட் செய்துவிட்டு சிறந்த வீரர்களை வாங்க மும்பை அணி முடிவு செய்துள்ளது. இதனை அறிந்த சிஎஸ்கே அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியா உடன் பேச்சுவார்த்தை வருகிறது.
டிரேட் செய்யும் போது சம்மந்தப்பட்ட வீரரின் ஒப்புதல் அவசியம். ஹர்திக் பாண்டியாவுக்கு சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்பதே விருப்பம். இதனால் மும்பை அணி நிர்வாகம் கேகேஆர், லக்னோ, டெல்லி உள்ளிட்ட அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும், சிஎஸ்கே அணியிடம் தான் அவர்கள் எதிர்பார்த்த வீரர்கள் இருக்கின்றனர்.
அக்சர் படேல், ரிங்கு சிங் உள்ளிட்டோரை மும்பை அணியால் எளிதாக உருவாக்க முடியும். இதனால் சிவம் துபே மற்றும் டிவால்ட் பிரெவிஸ் உள்ளிட்டோர் மீது மும்பை அணி கண் வைத்திருக்கிறது. இதில் சிவம் துபேவை விட்டுக் கொடுக்க சிஎஸ்கே அணி சம்மதித்துவிட்டது. ஆனால் பிரெவிஸை கொடுக்க வேண்டுமென்றால், வில் ஜாக்ஸ்-ஐ விட்டுக் கொடுங்கள் என்று சிஎஸ்கே நிர்வாகம் செக் வைத்திருக்கிறது.
இதனால் மும்பை அணி நிர்வாகம் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறது. இதனிடையே ஹர்திக் பாண்டியா திடீரென மஞ்சள் நிற காரில் இறங்கும் புகைப்படத்தை மஞ்சள் நிற இதயத்தை சேர்த்து பதிவிட்டுள்ளார். அதேபோல் சிஎஸ்கே அணி நிர்வாகமும் இம்முறை அனைத்து வீரர்களுடனும் பேசிய பின்னரே, ரிடென்ஷன் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று தெரிய வந்துள்ளது.