பிரேக் இல்லாமல் 463 கிமீ தூரம் இயக்கப்பட்ட வந்தே பாரத்: விசாரணைக்கு உத்தரவிட்ட ரயில்வே நிர்வாகம்| Vande Bharat train operated for 463 km without brakes: Railway administration orders an inquiry

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்குப் போதிய பிரேக் திறன் இல்லாமலேயே வந்தே பாரத் ரயில் ஒன்று சுமார் 463 கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த அக்டோபர் 24-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ஹதியாவிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சிக்கு, பயணிகள் இல்லாத வந்தே பாரத் ரயில் பெட்டிகளை சரக்கு ரயில் இன்ஜின் மூலம் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, வந்தே பாரத் ரயிலின் பிரேக் அமைப்பை சரக்கு ரயில் இன்ஜினுடன் முறையாக இணைக்க அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். ஆனால், ரயில்வே ஊழியர்கள் இந்த இணைப்பைச் சரியாகச் செய்யத் தவறியதுடன், ரயில் குழுவினர் விடுத்த எச்சரிக்கையையும் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது.

வந்தே பாரத் விரைவு ரயில்

வந்தே பாரத் விரைவு ரயில்

இது தொடர்பாக ராஞ்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு (DRM) தென்கிழக்கு ரயில்வே பிறப்பித்துள்ள அதிகாரபூர்வ உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, “ஹதியா – ராஞ்சி வழித்தடத்தில் ரயில் புறப்பட்ட பிறகு பிரேக் திறன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரயிலின் பிரேக் திறன் மிகவும் பலவீனமாகவும், செயலற்றதாகவும் இருப்பதை லோகோ பைலட் கண்டறிந்தார். தொடர்ந்து ராஞ்சி ரயில் நிலையத்தை அடைந்ததும், இது குறித்துப் பிரிவு கட்டுப்பாட்டாளர் மற்றும் இழுவை லோகோ கட்டுப்பாட்டாளரிடம் லோகோ பைலட் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *