`பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வாங்குவதில் புது ரூல்ஸ்!’ – மக்களவையில் மசோதா தாக்கல்: பின்னணி என்ன? | The Birth and Death Registration Bill 2026 has been passed in the Lok Sabha.

Spread the love

பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்ந்து பல ஆண்டுகள் கழித்துப் பதிவு செய்யும் முறையைக் கடினமாக்கும் வகையில், பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு (திருத்த) மசோதா 2026 நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பிறப்பு மற்றும் இறப்பு (திருத்த) மசோதா 2026 கடந்த 29-ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராயால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், ஜூலை 20 அன்று வினாத்தாள் கசிவு குறித்த விவாதத்தின்போது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, இந்த மசோதா மீது விவாதம் மேற்கொள்ளப்படவில்லை.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதாவில், “1969-ம் ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டத்தின் (கடைசியாக 2023-இல் திருத்தப்பட்டது) பிரிவு 13(3)-ல் மாற்றங்களை முன்மொழிவதே இந்தப் புதிய மசோதாவின் மையப் பொருளாகும்.

காலதாமதமாகச் செய்யப்படும் பதிவுகளுக்கான விதிமுறைகளை மிகவும் கடுமையானதாக மாற்றுவதன் மூலம், பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளைப் பல ஆண்டுகள் கழித்துப் பதிவு செய்வதைத் தவிர்த்து, உரிய காலத்தில் உடனடியாகப் பதிவு செய்வதை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்”‘ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *