பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கற்கள் ஏற்றுமதிக்கு 3 மாத தடை: தமிழக அரசு உத்தரவு|Why Tamil Nadu Stopped Stone Exports to Other States

Spread the love

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு 3 மாதங்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தில் “தமிழ்நாடு சட்டவிரோதக் கனிமச் சுரங்கம், போக்குவரத்து மற்றும் கனிமப் பொருட்கள் சேமிப்புத் தடுப்பு மற்றும் கனிம வியாபாரிகள் விதிகள், 2011′ -ல், புதிய விதி 3(A) சேர்க்கப்பட்டுத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் படி, கரடுமுரடான கற்கள் (rough stone) மற்றும் அதன் ஜல்லிப் பொருட்களின் (aggregates) போக்குவரத்தை முறைப்படுத்துவதற்கு புதுச்சேரி மற்றும் காரைக்காலைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்குக் கற்களைக் கொண்டுச் செல்ல தற்காலிகத் தடை.

உடனடியாக அமலாகி உள்ள இந்தத் தற்காலிகத் தடை மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்.

இந்தத் தடையில் கண்டாக்கள், பாறாங்கற்கள், எம்-சாண்ட், மெட்டல் ஜல்லி, பாலாஸ்ட்கள், மாவரைக்கும் கற்கள், கைக் சக்கைகள் மற்றும் கட்டடம் மற்றும் சாலை அமைக்கும் கற்கள் உள்ளிட்ட உடைந்த பொருட்கள் ஆகியவையும் அடங்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *