பிளவு , உட்கட்சி மோதல், சமாதான தூதுவரான ரஜினி: அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை  – Kumudam

Spread the love

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் மோதல்  ஏற்பட்டுள்ளது. எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி என இரு அணி உருவாகி உள்ளது. தவெகவை ஆதரவு நிலைப்பாடுடன் வேலுமணி செயல்பட தொடங்கி உள்ளது. அதுமட்டுமின்றி பொதுக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும் என்ற குரல் அதிமுக ஒலிக்க தொடங்கி உள்ளது. 

பொதுக்குழுவை கூட்ட வேலுமணி தரப்பு கையெழுத்து கேட்டால் யாரும் போட வேண்டாம் என எடப்பாடி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய நடிகர் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. ரஜினி நெருக்கமான வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்த போது. சமீபத்தில், ரஜினி தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். 

அதன் பின்னரே, தி.மு.க., – அ.தி.மு.க., கூட்டணி அமைத்து, ஆட்சி அமைப்பதற்கான பணிகள் நடந்தன. அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அதேநேரத்தில், பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக, அ.தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்டது. இந்த பிளவுக்கு காரணம் தான் என ரஜினி நினைக்கிறார். இதன் காரணமாகவே அ.தி.மு.க.,வை ஒன்றிணைக்க முயற்சி ரஜினி கையில் எடுத்து இருக்கிறார். 

அதுமட்டுமின்றி, அதிமுக இருதரப்பு மூத்த தலைவர்களிடமும் ரஜினிகாந்த் போனில் பேசி சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறார். ‘தமிழகத்துக்கு அ.தி.மு.க., அவசியம் தேவை, உங்களுக்குள் சண்டை போடாமல், இணைந்து பணியாற்றுங்கள்’ என அ.தி.மு.க., மூத்த தலைவர்களிடம் வலியுறுத்தி வருகிறாராம். தேவைப்பட்டால் எடப்பாடி, வேலுமணி தரப்பை சந்தித்து பேசவும் ரஜினி திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிகிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *