திராவிடக் கட்சிகளுக்கு மாற்று: தவெக வெற்றியைத் தீர்மானித்த ‘மைக்ரோ கேம்பைன்’ | An Alternative to Dravidian Parties: ‘Micro-Campaigning’ The Factors That Determined the TVK’s Victory!

Spread the love

தவெக ஆட்சி அமைத்ததும், அ.தி.மு.க-வில் இப்போது நடந்துவரும் உட்கட்சிப் பூசலெல்லாம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான செய்தியாக வலம் வருகின்றன.

இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக அணி அமைச்சரவையில் இடம்பெற தவெக-வுடன் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடன் தவெக – அதிமுக கூட்டணி, தவெக மீதான குற்றச்சாட்டு, அதிமுக பிளவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்
தே.தீட்ஷித்

அதற்கு கார்த்தி சிதம்பரம் அளித்த பதிலில், “தவெக தலைவர் விஜய் தலைமையில் அமைந்துள்ள இந்தப் புதிய அரசு, தற்போதுதான் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று நடைமுறைகளைச் சீரமைத்து வருகிறது. அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் முழுமையாக ஒதுக்கப்பட்டு, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும்போது, அதில் காங்கிரஸ் கட்சியும் கண்டிப்பாகப் பங்கேற்கும்.

எனினும், எத்தனை அமைச்சர்கள், என்னென்ன இலாக்காக்கள் என்பதை முதலமைச்சர் விஜய்தான் முடிவெடுக்க வேண்டும். புதிய அரசு செட்டிலாவதற்கும் அதன் முதல் பட்ஜெட்டைத் தயாரிப்பதற்கும் போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *