நேற்று (நவம்பர் 19) ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தற்போது பி.எஃப்.-இல் இருந்து பகுதி அளவு பி.எஃப். பணம் எடுக்கும் நடைமுறையில் சில மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அவை என்ன?
> தகுதியுள்ள உறுப்பினர்கள் இனி தங்களது பி.எஃப். இருப்புத் தொகையில் 90 சதவிகிதம் வரை எடுத்துக்கொள்ளலாம் (முன்பு இந்த வரம்பு 75 சதவிகிதமாக இருந்தது).
> வேலையிழப்பு தொடர்பான சில சூழ்நிலைகளில் பணம் எடுப்பதற்கான காத்திருப்புக் காலம் 12 மாதங்களிலிருந்து 2 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
> மருத்துவச் சிகிச்சை, கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் போன்ற செலவுகளுக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பி.எஃப். பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எப்போது நடைமுறைக்கு வருகிறது?
இப்போதைக்கு இந்த மாற்றங்களுக்கு ஒப்புதல் தான் வழங்கப்பட்டுள்ளதே தவிர, நடைமுறைக்கு வரவில்லை. எப்போது நடைமுறைக்கு வரும் என்று விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.