“பி.டி.உஷா சாதனையை முறியடித்தும் முழு மகிழ்ச்சி வரவில்லை” – வித்யா ராம்ராஜ் சொல்லும் காரணம் என்ன? \ The reason Vidya Ramraj says she hasn’t yet felt complete happiness, despite breaking P.T. Usha’s record

Spread the love

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய 3 பதக்கங்களை வென்று அசத்தினார்.

மேலும் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 42 ஆண்டு கால பி.டி. உஷாவின் தேசிய சாதனையையும் வித்யா ராமராஜ் முறியடித்தார். இதையடுத்து இன்று கோவை திரும்பிய வித்யா ராம்ராஜ்க்கு, கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வித்யா ராம்ராஜ், ”செண்ட்ரல் கவர்மெண்ட், ஸ்டேட் கவர்மெண்ட் ரெண்டு பேரும் சப்போர்ட் பண்ணுறாங்க. அதனாலதான் நான் இங்க இருக்கேன். என் கோச் நேபாள்சிங்க்கு நன்றி. கோச் இல்லாமல் இலக்கு நோக்கி செல்வது கஷ்டமாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பு மிக்க பயிற்சி எனக்கு உதவிகரமாக இருந்தது.

ஆசியன் கேம்ஸில் நாங்கள் சாதித்தது ரொம்ப ஹேப்பியா இருக்கு. எங்க கோச் கூட இருந்து சப்போர்ட் பண்ணினார். கடைசி சீசனை விட இந்த சீசனில் நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம். அதன் பலன்தான் எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது.

வித்யா ராம்ராஜ்

வித்யா ராம்ராஜ்

பி.டி.உஷாவின் சாதனையை நான் முறியடித்தது ரொம்ப ஹேப்பி. 43 ஆண்டுகளாக உடைக்கப்படாமல் இருந்த சாதனையை முறியடித்து, இந்திய மக்கள் இன்னும் மேலே செல்ல முடியும் என்பதை காட்டியுள்ளோம். 2023-யிலேயே அவரது சாதனையைச் சமன் செய்தேன். அது அவரது சாதனையை முறியடிக்க முடியுமென்ற நம்பிக்கையைத் தந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *