மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே:
“இது நமது வரலாற்றிலேயே ஜனநாயகத்தின் மீதான மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாகும்.
தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்ததற்காக மாணவர்கள் அடித்து நொறுக்கப்படுவதும், இழுத்துச் செல்லப்படுவதும், குற்றவாளிகளைப் போல் நடத்தப்படுவதும் இதற்கு முன் ஒருபோதும் நடந்ததில்லை.
உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்!
பீகாரில் மாணவர்களுக்கு எதிராக ஏகே-47 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. இது உண்மையா?
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மாணவர்கள் ஏன் கைது செய்யப்படுகிறார்கள்?
இதற்குப் காரணமானவர்கள் தங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துவிட முடியாது.”
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்:
“ஏகே-47 என்பது ஒரு தாக்குதல் துப்பாக்கி. தீவிரவாதிகள் அல்லது தீவிரவாதப் பிரிவினரை (மாவோயிஸ்டுகள் போன்றோர்) எதிர்த்துப் போரிடும்போது மட்டுமே காவல் படைகளால் அது வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.
பொதுமக்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த அது ஒருபோதும் — எந்தச் சூழலிலும் — பயன்படுத்தப்படுவதில்லை.
பொதுமக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த அனுப்பப்பட்ட ஒரு காவலருக்கு, ஆயுதக் கிடங்கிலிருந்து (armoury) ஏகே-47 துப்பாக்கி வழங்கப்பட்டிருக்கவே கூடாது.
ஏகே-47 துப்பாக்கியைப் பயன்படுத்திய காவலர் மட்டுமல்ல, அந்த ஆயுதத்தை வழங்கிய ஆயுதக் கிடங்குப் பொறுப்பாளரும் (armoury-in-charge) பணிநீக்கம் செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.”