புதிய பயணம்: வழக்கறிஞராக பதிவு செய்த பேரறிவாளன்! | A New Journey: Perarivalan Enrolls as a Lawyer!

Spread the love

மரண தண்டனை விதிக்கப்பட்டு, 31 ஆண்டுகால சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலையான ஏ.ஜி. பேரறிவாளன் (54), தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுவதற்காகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளார்.

1991-ல் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 142-வது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மே 2022-ல் விடுதலை செய்யப்பட்டார்.

அதன்பிறகு, பெங்களூருவில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்கத் தொடங்கினார் பேரறிவாளன். தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திய அவர் 2025-ல் பட்டம் பெற்றார். அதே ஆண்டில் அகில இந்திய பார் தேர்விலும் (AIBE) வெற்றி பெற்றார்.

பேரறிவாளன்

பேரறிவாளன்

அதைத் தொடர்ந்து, நேற்று (ஏப்ரல் 27) கறுப்பு அங்கி அணிந்து வழக்கறிஞராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்துகொண்ட பேரறிவாளன், விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பணியைத் தொடங்கவுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஒரு புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பவில்லை. சட்ட உதவி கிடைக்காமல் சிறையில் வாடும் ஏழை எளிய கைதிகளின் குரலாக ஒலிக்கவே விரும்புகிறேன்.

ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளது போல, தண்டனைக்குப் பிந்தைய மறுஆய்வுச் சட்டங்கள் இந்தியாவிலும் வலுப்பெற வேண்டும் என்பதே எனது கனவு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *