புதிய பஸ் பாஸ் வரும் வரை மாணவர்களுக்கு இலவச பயணம்|Free Bus Travel Allowed for TN Students Before Pass Distribution

Spread the love

“புதிய பயண அட்டை’ வழங்கப்படுவதற்கு முன்பு, அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்.

“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, வரும் 04.06.2026 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும்,

அரசு பேருந்து

அரசு பேருந்து
விகடன் | கோப்புப்படம்

2026-27 கல்வியாண்டில் மாணவர் /மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி / கல்லூரியிலேயே வழங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக ஏற்பாடு செய்து வருவதால், அதற்கு தேவையான கால அளவினை கருத்தில் கொண்டு, பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அணிந்து, எவ்வித சிரமமின்றி தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரை கட்டணமின்றி சென்று வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *