ரெக்கார்டுகளை நொறுக்கிய 15 வயது வைபவ்! | Vaibhav Suryavanshi IPL 2026 cricket records

Spread the love

டி20 கிரிக்கெட்டில் ஒரு தொடர் அல்லது டோர்னமென்டில் அதிக பவுண்டரிகள் (ஃபோர்கள் மற்றும் சிக்ஸர்கள்) அடித்த வீரர் என்ற உலக சாதனையும் இப்போது வைபவ் வசமாகியுள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 128 பவுண்டரிகளுடன் இந்த சாதனையை வைத்திருந்தார்.

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 9 பவுண்டரிகள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 14-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து 129 பவுண்டரிகளுடன் புதிய உலக சாதனை படைத்தார் இந்த இளம் வீரர்.

ஏற்கனவே ஒரு சீசனில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையை இதற்கு முந்திய போட்டியில் நிகழ்த்தினார் வைபவ். முதல் இடத்தில் இருந்த யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயிலை பின்னிக்கு தள்ளினார் இந்த யுனிவர்சல் பேபி பாஸ் வைபவ்!

இந்த ஐபிஎல் 2026 சீசனில் வைபவ்வின் ஆட்டம் உச்சபட்சமாக அமைந்திருக்கிறது. 16 போட்டிகளில் விளையாடி, 48.50 என்ற சராசரியுடன் 776 ரன்களைக் குவித்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 237.30 என்பது பந்துவீச்சாளர்களுக்கு அவர் சிம்மசொப்பனமாக விளங்கியதை உணர்த்துகிறது.

இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்களும் அடங்கும். குவாலிஃபயர் 2 போட்டியில் சதம் கைநழுவிப் போனாலும், இந்த 15 வயது வீரர் படைத்த சாதனைகள் பல ஆண்டுகள் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *