புதிய மா., செ-க்ககள் லிஸ்ட்: பரிந்துரைத்த உதயநிதி, கனிமொழி; அதிருப்தியில் ஸ்டாலின் – பின்னணி என்ன?

Spread the love

புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்டில் திருப்தி இல்லாததால் ஸ்டாலின் அறிவிப்பை நிறுத்தி வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இதில் உதயநிதி, கனிமொழி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் கொண்ட லிஸ்டையும் கொடுத்திருப்பதாகவும் இதிலும் ஸ்டாலினுக்கு திருப்தி இல்லாததால் அறிவிப்பு தள்ளி போயிருப்பதாக சொல்கிறார்கள். இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம். “தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட திமுக-வில் 70க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இதனை 110 மாவட்டச் செயலாளர்களாக உயர்த்த வேண்டும் என்பது திமுக தலைவர் ஸ்டாலின் எண்ணம். அதற்கான முன்னெடுப்பை செயற்குழுவில் பேசி தொடங்கி வைத்தார் ஸ்டாலின்.

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

இதற்கான லிஸ்ட் தயாரிப்பு பணிகளில் தலைமையில் உள்ள நிர்வாகிகள் செய்து வந்தனர். இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர், ஒரு மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் இருந்தால் அதற்கு ஒரு மாவட்டச் செயலாளர் என லிஸ்ட் தயார் செய்யப்பட்டது. தஞ்சாவூர், ஒரத்தநாடு தொகுதிகளை உள்ளடக்கி மாவட்டத்துக்கு டாக்டர் அஞ்சுகம் பூபதி, கும்பகோணம், திருவிடைமருதூர் கொண்ட மாவட்டத்துக்கு கோவி.செழியன், பாபநாசம், திருவையாறு தொகுதிகளுக்கு முத்துசெல்வம் போன்றவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக சொல்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *