இந்த சூழலில், ஒருங்கிணைப்பாளர்கள் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று பேசியபோது, அங்குள்ள காவல் ஆய்வாளர், `மேலிடத்து உத்தரவு இல்லாமல் அனுமதி தர முடியாது சார்… அங்க பிரச்னை நடந்தால் சிக்கலாகிடும்’ என்று கூறியுள்ளார். அதே நேரம், சுமார் 12 பேர் கொண்ட இந்து முன்னணி அமைப்பினர் திரையரங்கிற்கே நேரடியாக வந்து, `இந்த ஆவணப்படத்தை தமிழகத்தில் எங்குமே திரையிட விடமாட்டோம். மீறித் திரையிட்டால் மாலையில் தியேட்டரை முற்றுகையிடுவோம்’ என்று தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டி, ஒரு கடிதத்தையும் கொடுத்தனர்” எனக் கூறி, அந்தக் கடிதத்தை நமக்கும் அனுப்பிவைத்தார்.
இந்து முன்னணியின் மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் ர.முனுசாமி (எ) மாலி என்பவரின் கையெழுத்திட்ட அந்தக் கடிதம் இது…

`சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்களது நிறுவனத்தில் இருந்து இன்று மாலை 6:00 மணி அளவில் திருப்பரங்குன்றம் பைல்ஸ் என்ற பெயரில் ஆவணத் திரைப்படம் வெளியிடப்படுவதாகவும், அதில் தமிமுன் அன்சாரி, கருணாஸ், கம்யூனிஸ்ட் கனகராஜ், சத்யராஜ் போன்ற பலர் கலந்து கொள்வதாகவும் தெரிய வருகிறது இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டால் சமூகத்தில் மதரீதியான பதட்டத்தை ஏற்படுத்திவிடும் என அச்சப்படுகிறோம்.