மாணவர்கள் போராட்டம்:“சாக்கடை தலைமுறை; வாந்தி வரும் உணர்வு ஏற்பட்டது”- கங்கனா ரனாவத் சர்ச்சைப் பதிவு | Kangana Ranaut has made controversial remarks regarding student protests

Spread the love

Gen Z தலைமுறையினரை “Generation Gutter” (சாக்கடைத் தலைமுறை). என் வாழ்நாளில் ஒரே இடத்தில் இவ்வளவு அருவருப்பான விஷயங்களை நான் பார்த்ததில்லை. மேற்கத்திய பாணியைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் இந்தியப் பெண்களின் புதிய தலைமுறை இது. இவர்களை நான் “சாக்கடைத் தலைமுறை’ என்று அழைக்கிறேன். இவர்கள் படிப்பிலும் சிறந்து விளங்குவதில்லை. அதே நேரத்தில் குடும்பத்தைப் பராமரிக்கும் இல்லத்தரசிகளாக வாழ முடியாத அளவிற்கு மோசமானவர்களாகவும் இருக்கிறார்கள். போதைப் பொருட்கள், மது அருந்துதல் அல்லது பலருடன் தொடர்பில் உறவில் இருப்பதைச் சுதந்திரமாகப் பெருமையுடன் வெளிப்படுத்துகிறார்கள். பெற்றோரின் சம்பாத்தியத்தில் வெட்கமின்றி வாழ்கிறார்கள்.” எனக் கடுமையாக தெரிவித்திருந்தார்.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

கங்கனாவின் இந்தக் கருத்துகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் பாய் ஜகதாப், “ஒரு பெண்ணாக இருந்துகொண்டும், போராட்டத்தின் போது மாணவர்கள் துன்புறுத்தப்பட்டு, அடிக்கப்பட்டு, தவறாக நடத்தப்பட்டதற்காக கங்கனாவுக்கு எந்த மனவருத்தமும் இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

AIMIM கட்சியின் தலைவர் வாரிஸ் பதான், “கங்கனாவின் பேச்சு ‘கடும் கண்டனத்திற்குரியது. அவர் இந்த தலைமுறை இளைஞர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பாஜக எம்.பி பயன்படுத்திய இந்த மொழியை பிரதமர் மோடி கவனத்தில் கொள்ள வேண்டும்.”எனத் தெரிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *