புதுச்சேரி: தந்தையை பராமரிக்காத மூன்று மகன்களுக்கு சிறை தண்டனை! – அதிரடி காட்டிய பெண் நீதிபதி

Spread the love

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி. மனைவியை இழந்த முனுசாமிக்கு தற்போதைய வயது 84. இவருக்கு வரதராஜன், திருமுருகன், மீனாட்சி சுந்தரம் என மூன்று மகன்கள் இருக்கின்றனர்.

திருப்பட்டினம் பகுதியில் வசித்துவரும் அவர்கள் உணவு, மருத்துவம் உள்ளிட்ட எந்தவித பராமரிப்பையும் செய்யாமல் பல ஆண்டுகளாக தந்தை முனுசாமியை தனித்து விட்டிருக்கின்றனர். அதில் விரக்தியடைந்த முனுசாமி கடந்த 2018-ம் ஆண்டு, `வயதான என்னிடம் இருந்து அனைத்தையும் பெற்றுக் கொண்ட என் மகன்கள், என்னைப் பராமரிக்காமல் ஒதுக்கிவிட்டனர்.

வயதான எனக்கு சாப்பிடக் கூட வழியில்லை. மூன்று மகன்களில் ஒருவர் கூட சாப்பாடு கொடுப்பதில்லை” என்று காரைக்கால் சார்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

காரைக்கால் சார்பு நீதிமன்றம்

காரைக்கால் சார்பு நீதிமன்றம்

அதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முதியவர் முனுசாமியின் மனுவை ஏற்ற அப்போதைய சார்பு நீதிமன்ற நீதிபதியும், துணை ஆட்சியருமான ஆதர்ஷ், அந்த மனு மீது விசாரணை செய்தார்.

அதில், முனுசாமியின் மூன்று மகன்களும் அவரை பராமரிக்காமல் விட்டது தெரிய வந்தது. அதனால், மூன்று மகன்களும் மாதம்தோறும் முனுசாமிக்குத் தலா ரூ.2,000 வழங்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சிறை தண்டனை வழங்கப்படும் என்று உத்தரவிட்டார் துணை ஆட்சியர் ஆதர்ஷ்.

அப்போது அதற்கு ஒப்புக் கொண்ட முனுசாமியின் மூன்று மகன்களும், அதன் பிறகு அந்த பராமரிப்புத் தொகையை வழங்க முடியாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மேல் முறையீடு செய்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *