புதுச்சேரி: பொய்ப் புகாரால் பெண்ணை பழிவாங்க நினைத்த முதியவர்! – போலீஸார் செய்த `சைலண்ட்’ சம்பவம்

Spread the love

அதில் கோபமடைந்த கோபால், காயத்ரி ஸ்ரீகாந்தின் பெண்மையை இழிவு செய்யும் விதமாகவும்,  கொலை மிரட்டலும் விடுத்து வாட்ஸ்-அப் குழுக்களில் பகிர்ந்தார். அதனடிப்படையில் கடந்த ஜூன் மாதம் காயத்ரி ஸ்ரீகாந்த் கொடுத்த புகாரின் அடிப்படையில், கோபாலைக் கைது செய்தனர் லாஸ்பேட்டை போலீஸார்.

அதன்பிறகு ஜாமீனில் வெளியில் வந்த கோபால், காயத்ரியை பழிவாங்க முடிவெடுத்து ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை, பெரியகடை என மூன்று காவல் நிலையங்களில் தனித்தனியாக புகார்களை அளித்தார். அதில், `காயத்ரி ஸ்ரீகாந்த் இரவு நேரத்தில் , தன்னை உல்லாசத்துக்கு கைகாட்டி அழைத்தார்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக பொய்ப் புகார்களை அளித்திருக்கும் கோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த மூன்று காவல் நிலையங்களிலும் புகாரளித்தார் காயத்ரி ஸ்ரீகாந்த்.

அந்தப் புகார்களின் மீது போலீஸார் நடத்திய விசாரணையில், கோபால் பழிவாங்கும் நோக்கில் பொய்ப் புகார்கள் அளித்ததை ஆதாரங்களுடன் கண்டுபிடித்தனர். ஆனால் கோபால் அரசியல் பின்னணி கொண்டவர் என்பதால், அமைதியாக அவரை விசாரணைக்கு அழைத்து அப்படியே கைது செய்து சிறைக்கு அனுப்பியது. இந்தக் கைதுக்குப் பிறகு அமைச்சர்கள் மற்றும் அரசு உயரதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைத்தும், ஆபாசமாகவும் பேசியும் கோபால் வெளியிட்ட வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதனால் பாதிக்கப்பட்ட ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கோபால் மீது புகாரளிக்கத் தயாராகி வருகிறார்களாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *