பூவரசம் பூ பூத்தாச்சு – பெண்களின் நிஜ வாழ்க்கைப் போராட்டச் சித்திரம் |How Friendship and Compassion Transformed a Struggling Family

Spread the love

“ஒரு விஷயம் பார்த்தாயா பிரபா! நம்மை மாதிரிமக்கள்பணத்துக்குத் திண்டாடுகிறோம்.‌
வேறு பலர்   எத்தனையோ விதங்களில் கஷ்டப்படுகிறார்கள்”.
“என்ன சொல்கிறாய் நீ!”

“முன்பெல்லாம் கிராமங்களில் படிக்காதவர்கள் நிறைய இருப்பார்கள். மணி ஆர்டர் கடிதம் வந்தால் கூட படித்துக் காண்பிக்க ஆள் வேண்டும்.சிலர் தானாகவே வந்து உதவி செய்வார்கள்”.

“ஆமாம்! சினிமாவில் கூட வடிவேலு கடிதத்தில் எழுதாததை எல்லாம் படித்துக் காண்பிப்பாரே!”

“அதேதான்! அதுமாதிரி இன்னிக்கு டெக்னாலஜி தெரியாமல் திண்டாடும் முதியவர் கூட்டம் இருக்கிறது. மிகவும் படித்தவர்கள் ஆக இருந்தபோதும் பல விஷயங்களை அவர்களால்  எளிதில் கடந்து போக முடிவதில்லை”. 

“எங்கள் ஃப்ளாட்டில்  ஒருவர்  இன்று வந்து என்னிடம் சில சந்தேகங்கள் கேட்டார்.சிலவற்றைக் கற்றுக் கொடுத்தேன்.
அப்போது அவர் ஒரு விஷயம் சொன்னார்”.

“என்ன சொன்னார்!” பிரபா நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
“அந்த அம்மாவோட சொந்தக்காரங்க புதுசா ஏதோ பிஸினஸ் ஆரம்பிச்சிருக்காங்களாம்”.

“ஸ்டார்ட் அப்பா!”

“அப்படித்தான் வைத்துக் கொள்ளேன். 

அவர்களுக்கு நிறைய பேர் உதவிக்கு தேவைப்படுகிறார்களாம்”.
“என்ன பிஸினஸ்! என்ன உதவி!”

பிரபாவின் குரலில் ஆர்வம் தெரிந்தது.

“மேலை நாடுகள் மாதிரி சில மணி நேரம் வேலை பார்த்தாலும் போதுமாம்.

நாம் இரண்டு பேரும் சனி ஞாயிறு போய்ப் பார்ப்போமா?”
“எனக்குத்தான் பணத் தேவை! உனக்கு என்ன!”
“வாழ்க்கையில் பணத்தை தாண்டியும்  நிறைய இருக்கிறது பிரபா!”

பிரபா அசுவாரசியமாக தலையாட்டினாள்.

“அப்புறம் முதியவர்களுக்கு டிஜிட்டல் உலகத்தை அறிமுகப் படுத்தும் உதவி!”

“அதுசரி! அதற்கெல்லாம் நமக்கு நேரம் வேண்டாமா?”
“அதோடு எத்தனையோ சந்தேகங்கள் கேட்பார்கள்.
ஆன்லைன் விண்ணப்பங்கள், மின்கட்டணம் செலுத்துவது என்று எல்லாமே இதில் வரும்!”.
யாரை செய்ய சொல்லலாம் என்று நினைக்கிறாய்?”
“சந்தேகமே இல்லாமல் பரசுவைத்தான்!”
“அவனா! இதற்கு ஒப்புக்கொள்வானா?”
பிரபாவின் குரலில் சோர்வு இருந்தது.
“முயற்சி செய்கிறேன் பவானி!”

அவள் எதிர்பார்த்தபடியே அவன் எகிறினான்.

“இதெல்லாம் ஒரு வேலையா!”

“உனக்கு இது பிடிக்காது தான். ஆனால் ஒரு மாற்றமாக ஏன் முயற்சி செய்யக்கூடாது? உன்னுடைய நேரம் யாரோ ஒரு முதியவருக்கு உதவியதாக இருக்கட்டுமே! இதில் உனக்கு பணமும் கிடைக்கும்”.

“கடவுள் சித்தமிருந்தால் யாராவது ஒருவருக்கு உனக்கு வேலை வாய்ப்பு கொடுக்க தெரிந்தவர்கள் கூட இருக்கலாம்”.

அவள் பொறுமையாக எடுத்துச் சொன்னாள்.

இரண்டு நாட்கள் கழித்து அந்த நிறுவனத்துக்கு அவன் நேர்முகத்தேர்வுக்கு சென்றான்.

அவர்களுடைய செயல்பாடு, நோக்கம் எல்லாமே அவனுக்குப் பிடித்திருந்தது.

முதியவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு உதவுவதுடன் தனிமையில் வாழ்பவர்களுக்கு

தேவையான சேவைகளைஒருங்கிணைப்பதும் அதன் குறிக்கோளாக இருந்தது.

பரசு சேவையை வேலையாகத்தான் செய்தான்.

குறிப்பிட்ட சில மணி நேரம் என்றதால் அலுப்பாகத் தெரியவில்லை.

அதற்குப் பதிலாகஅவனையும் அறியாமல் மனதில் ஒரு நிறைவு வந்தது.

சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட முதியவர்கள் மகிழ்வதும் நன்றி பாராட்டுவதும் மிகப் பெரிய விஷயமாகத் தோன்றியது.

அவனுக்குள்ளும் உற்சாகப்பூ பூத்தது.முதியவர்களின் உணர்வுகள், அவர்கள் காட்டும் நன்றியுணர்ச்சி எல்லாமே அவனுக்கு புதிதாக , வித்தியாசமாக இருந்தது.

ஏனோதானோ என்று இருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பொறுப்புகளை உணர ஆரம்பித்தான்.

அவர்களுடைய வாழ்க்கையிலும் வசந்தம் மலர்ந்தது.

பிரபாவும் வார இறுதிகளில் தனக்குத் தெரிந்த ஆலோசனைகளை அந்த நிறுவனத்துக்கு வழங்கினாள்.நேரிலும் சென்று தன்னால் இயன்றதை செய்து கொடுத்தாள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *