பெங்களூரு கொலை வழக்கில் அடுத்தடுத்து சிக்கிய காதலி, காதலன்! – புதுச்சேரி போலீஸில் சிக்கியது எப்படி ? | In bengaluru triple murder case both lovers got arrested

Spread the love

அதில் சந்தேகமடைந்த உதவி ஆய்வாளர், அந்த இளைஞரிடம் விசாரணை செய்தார். அப்போது மது போதையில் இருந்த அந்த இளைஞர் ஊர் பெயரை மாற்றி மாற்றி குறிப்பிட்டதால் சந்தேகமடைந்த உதவி ஆய்வாளர், அவரை தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையம் நோக்கிச் சென்றார்.

அப்போது அந்த இளைஞர் திடீரென வாகனத்தில் இருந்து குதித்து தப்பியோடினார். அதில் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்த அந்த உதவி ஆய்வாளர், துரத்திச் சென்று அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தார்.

உடனே அந்தத் தகவலை காவல் நிலையத்திற்கு தெரிவித்தார். அதற்கடுத்த சில நிமிடங்களில் அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தார்

இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்

இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன்

அப்போதுதான் அவர் பெங்களூரில் மூன்று கொலைகளைச் செய்த சுவேதாவின் காதலர் கென்னட் என்பது தெரிய வந்தது. அதையடுத்து பெங்களூரு போலீஸாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள், கெனத்தை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பெங்களூருவை உலுக்கிய கொலை வழக்கில் தொடர்புடைய இருவரையும் அடுத்தடுத்து கைது செய்ததற்காக புதுச்சேரி போலீஸாருக்கு பெங்களூரு போலீஸார் நன்றி தெரிவித்திருக்கும் நிலையில், உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனிடம் பேசினோம். “புதுச்சேரி சுற்றுலா மாநிலம் என்பதால், எப்போதும் நாங்கள் ரோந்துப் பணியில் இருப்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *