இந்நிலையில் வழக்கறிஞர் தீலிப்குமார் என்பவர் பெங்களூரு 48-வது கூடுதல் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், “தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி ஒரு நபர் ஒரு இடத்தில் மட்டுமே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால், நடிகர் பிரகாஷ்ராஜிடம் 4 மாநில வாக்காளர் அடையாள அட்டைகள் உள்ளன.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தனது பெயரில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கிறார். இதுகுறித்து கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தேன். நடவடிக்கை இல்லை.
எனவே, நடிகர் பிரகாஷ்ராஜ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படியும், நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகும்படி ஏற்கனவே பிரகாஷ்ராஜுக்கு 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று சொல்லப்படுகிறது. ,