பெட்ரோல், டீசல் விலை உயர்வு: வீட்டு பட்ஜெட்டுக்கும் பொருளாதாரத்துக்கும் புதிய சவால்|Petrol Price Shock: Your Monthly Budget Is Under Threat

Spread the love

தற்போது காஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. இன்று வணிகப் பயன்பாட்டு காஸ் சிலிண்டர் விலை ரூ.49 உயர்ந்துள்ளது. ஏற்கெனவே சிலிண்டர் விலை உயர்வால், உணவகங்கள் தங்களுடைய உணவுகளின் விலையை உயர்த்தின.

சிலிண்டர் விலை உயர்வு ப்ளஸ் பெட்ரோல், டீசல் விலை உயர்வு – இப்போது இரண்டையும் சமாளிக்க உணவுகளின் விலை இன்னும் ஏற்றப்படும்.

தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, இதனால், மூலப்பொருள்களின் விலையும் உயர்ந்தால், Packaged பொருள்களின் விலை உயரும் அபாயம் உண்டு.

அனைத்தும் விலை ஏறிக்கொண்டு போனால், வழக்கமாக நாம் போடும் பட்ஜெட்டில் துண்டு விழும்.

விலை உயர்வு

விலை உயர்வு

ஒரு வீட்டிலேயே இத்தனை பிரச்னை என்றால், ஒரு நாட்டிற்கு எத்தனை பொருளாதார நெருக்கடி எழும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

வரும் ஜூலை மாதத்திற்கு மேலும், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாவிற்கு 90 டாலர்கள் என வர்த்தகமானால், இந்தியா ரூ.1.25 டிரில்லியன் – 1.50 டிரில்லியன் அளவிற்கு நிதிச்சுமையை சந்திக்கும் என்று ஜெஃப்ரிஸ் நிறுவனம் கணித்துள்ளது.

எந்தப் பக்கம் பார்த்தாலுமே தற்போதைய சூழலால் வீட்டுப் பொருளாதாரத்திற்கும் சரி, நாட்டுப் பொருளாதாரத்திற்கும் சரி “நல்ல அடி’ விழ உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *