பெண்களுக்கும் முன்னந்தலையில் வழுக்கை…இந்தக் காரணம் தெரிந்தால் சரி செய்யலாம். | Frontal baldness in women… If the cause is known, it can be treated.

Spread the love

சில பெண்களுக்கு இது மெல்ல மெல்லவே அதிகரிக்கும். இன்னும் சிலருக்கு அதிரடியாக முடி உதிரும். 35 ப்ளஸ் வயதில் இருக்கும் பெண்களில் 40 சதவிகிதம் பேர் இதனால் பாதிக்கப்படுவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. ‘ஃபீமேல் பேட்டர்ன் ஹேர் லாஸ் தவிர வேறு சில பிரச்னைகளாலும் பெண்களுக்கு முடி உதிர்ந்து, மெலிந்து, வழுக்கை போல தெரியலாம். மன அழுத்தம்,  பிரசவத்துக்குப் பிறகான ஹார்மோன் சமநிலையின்மை, போன்றவற்றால் ஏற்படும் ‘டெலோஜென் எஃப்ளுவியம்’ (Telogen Effluvium) எனும் பிரச்னையாலும் முடி உதிரலாம்.   இரும்புச்சத்துக் குறைபாடு, ரத்தம் தொடர்பான நோய்களும் காரணமாகலாம்.

இவை தவிர, ‘ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா’ (Androgenetic alopecia) எனப்படும் ஒருவகை வழுக்கை 40 வயதுக்கு மேலான பெண்களில் 50 சதவிகிதம் பேரை பாதிக்கிறது. அவர்களில் 13 சதவிகிதம் பேருக்கு மெனோபாஸ் காலத்தில் இது பாதிப்பதாகவும் தெரிகிறது. 

'ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா' (Androgenetic alopecia) எனப்படும் ஒருவகை வழுக்கை 40 வயதுக்கு மேலான பெண்களில் 50 சதவிகிதம் பேரை பாதிக்கிறது.

‘ஆண்ட்ரோஜெனடிக் அலோபேஷியா’ (Androgenetic alopecia) எனப்படும் ஒருவகை வழுக்கை 40 வயதுக்கு மேலான பெண்களில் 50 சதவிகிதம் பேரை பாதிக்கிறது.

ஆண் ஹார்மோனான ஆண்ட்ரோஜென், பெண்களின் உடலிலும் இருக்கும். அவை டிஹெச்டி (dihydrotestosterone) எனப்படும் ரசாயனத்தை உற்பத்தி செய்யும். அந்த உற்பத்தியைத் தூண்டும் ஒருவித என்சைம், பெண் உடலில் அதிகரிக்கும்போது, அவர்களுக்கு முடி மெலிந்து, வழுக்கை விழுகிறது. மேற்குறிப்பிட்டவற்றில் எந்தப் பிரச்னையால் முடி மெலிவும் உதிர்வும் இருக்கிறதோ, அதைப் பொறுத்து முன்னந்தலையிலோ, பக்கவாட்டிலோ வழுக்கை விழும். வயதாவதன் காரணமாகவும் கூந்தல் மெலிந்து, மண்டைப்பகுதி தெரியலாம். சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகள் உட்கொள்ளப்படாததும் காரணமாகலாம்.

எனவே, நீங்கள் முதலில் கூந்தல் சிகிச்சை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். முடி உதிர்வு மற்றும் வழுக்கைக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு சிகிச்சையைத் தொடங்கினால், உங்கள் பிரச்னையைக் குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ வாய்ப்புகள் அதிகம். 

டாக்டர் தலத் சலீம்:

சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டனில் செஹட் த ஸ்கின் அண்ட் ஹேர் கிளினிக்கின் உரிமையாளர். 26 ஆண்டுக்கால அனுபவம் உள்ளவர். லண்டனில் யுனானி மருத்துவம் பயின்றவர், சென்னை கீழ்ப்பாக்கத்தில் ‘செஹட்’ (Sehat) என்ற பெயரில் கிளினிக் ஒன்றை நிறுவி, கூந்தல் மற்றும் சரும பராமரிப்பு குறித்த சிகிச்சைகளை வழங்கி வருகிறார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *