தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, முதல்வர் விஜயின் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. எனினும், இந்த நியமனம் தொடர்பான அரசாணை இதுவரை வெளியாகவில்லை.
ஜான் ஆரோக்கியசாமிக்கு அரசு வாகனம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நியமனம் நடைமுறையில் அமல்படுத்தப்பட்டிருந்தாலும், அதற்கான ஆவணங்கள் ஏன் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லை.

இந்த நிலையில், பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், “முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் ஆலோசகர் பணி நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன்? முதல்வர் திரு. விஜய் அவர்கள், ஜான் ஆரோக்கியசாமி என்பவரைத் தனது ஆலோசகராக அமர்த்தி, அவருக்கு அரசு வாகனம், காவல்துறைப் பாதுகாப்பு மற்றும் தலைமைச் செயலகத்திலேயே தனி அலுவலகம் என அரசு அதிகாரத்தை வாரி வழங்கியுள்ளார். இந்த நியமனம் குறித்த அரசாணையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்டால், முன்னுக்குப் பின் முரணான பதில்களை வழங்கி உண்மையை மூடி மறைக்கிறது திரு. விஜய் அரசு.