திருச்சியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: திமுகவினர் செய்த தகவல் திருட்டு காரணமாக அனைவரும் எச்சரிகையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பேசிய இபிஎஸ், ‘’திமுக ஆட்சியில், 10 மாதங்களுக்கு முன்பு உங்கள் கனவை சொல்லுங்கள் என்றார்.
ஓரணியில் தமிழ்நாடு என்றெல்லாம் பேரை வைத்து வீடு வீடாக வந்து மக்களிடம் செல்போன் எண், ஆதார் எண் எல்லாம் வாங்கினார்கள். நாங்கள் உடனே நீதிமன்றம் சென்றோம். இது தவறானது, மக்களின் படம், முழு தகவல்களும் எடுத்துவிடுவார்கள் என்று வழக்குப் போட்டோம். நாங்கள் நினைத்தது சரியாகிவிட்டது. இப்போது திமுகவுக்கு தேர்தல் வேலை செய்யும் பென் நிறுவனத்திடம் அனைத்துத் தகவல்களையும் ஒப்படைத்துவிட்டனர். அதனால் இப்போது செல்போனில் ‘திமுகவுக்கு வாக்களியுங்கள், நீங்கள் திமுக ஆதரவாளர்’ என்று வருகிறது.
அரசை நம்பித்தானே விவரத்தைச் சொன்னீர்கள். அதை தவறாகப் பயன்படுத்தலாமா? போன் செய்கிறார்கள், வீட்டில் இருக்கிறார்களா என்று பார்க்கிறார்கள். வீட்டில் இல்லாதபோது கொள்ளை அடித்துவிட்டு போகிறார்கள். இந்த விஷயத்தில் பெண்கள், இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏனென்றால், இதில் அவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது…’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
