கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவானப் படம் ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படம். கிராமத்துப் பின்னணியும், கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவுகளைக் காட்டிய விதமும், படத்தின் உருத்தலில்லா கதை சொல்லலுமே இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கேரள முதல்வர் வி.டி.சதீசன் திரைப்படத்தை பாராட்டியிருக்கிறார். இந்தத் திரைப்படம் குறித்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மாதத்தில் ஒரு படமாவது பார்க்கும் வழக்கம் இருந்தது, ஆனால் பணிச்சுமைகள் காரணமாக அது விடுபட்டுப்போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்றுதான் ஒரு திரைப்படத்தை ஒரே மூச்சில் பார்த்தேன்.

மகளுடனும் அவளுடைய தோழியுடனும் சேர்ந்து ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை மிகவும் ரசித்து பார்த்து முடித்தேன். இத்திரைப்படத்தின் உருவாக்கம்தான் இதை வித்தியாசப்படுத்துகிறது. சிறிதளவுகூட சலிப்பு ஏற்படவில்லை. என் இளமைக் காலத்தோடு உடனடியாக என்னால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. அன்று நாங்கள் கண்ட கிராமப்புறங்கள், அங்கிருந்த மனிதர்கள், அங்கு பார்த்த சாதாரண வாழ்க்கை, அவர்களுக்கு இடையேயான அன்பு, கதகதப்பான காதல் என எல்லாவற்றாலும் நம்மை ஈர்த்து உட்கார வைத்த திரைப்படம் இது. பார்த்து முடித்த பிறகு, “இவ்வளவு காலம் பார்க்காமல் ஏன் தாமதித்தோம்?” என்றுதான் யோசிக்கத் தோன்றியது.