பாரம்பர்யத்தையும் சமூகப் பிணைப்பையும் இணைக்கும் முயற்சி!
தமிழகத்தில் நவராத்திரி கொலு என்பது வெறும் பொம்மைகளை அடுக்கி வைக்கும் நிகழ்வு மட்டுமல்ல. புராணக் கதைகள், தெய்வங்கள், நாட்டுப்புற வாழ்க்கை, கைவினைக் கலைகள் மற்றும் சமூகப் பண்பாடுகளை வெளிப்படுத்தும் கலாசார அடையாளமாகவும் விளங்குகிறது.
SPR கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், உலக சாதனைப் புத்தகத்தின் பட்டய அதிகாரி அங்கிதா ஷா, நிறுவனத்தின் வருவாய்த் துணைத் தலைவர் பிரகாஷ் மோகனசுந்தரம் மற்றும் விற்பனை, சந்தைப்படுத்தல் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பாலகிருஷ்ண சந்திரசேகரன் ஆகியோருக்கு உலக சாதனைச் சான்றிதழை வழங்கும் நிகழ்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சியுடன் கலாசாரத்திற்கும் முக்கியத்துவம்!
குடியிருப்பு மற்றும் வணிகக் கட்டமைப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், மக்களை ஒன்றிணைக்கும் சமூக மற்றும் கலாசார அனுபவங்களையும் உருவாக்க முடியும் என்பதை SPR சிட்டியின் நவராத்திரி உற்சவம் வெளிப்படுத்தியுள்ளது.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களின் வருகையும் சர்வதேச அங்கீகாரமும் இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
நகரமயமாக்கல் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், பாரம்பரியக் கலைகளையும் சமூகக் கொண்டாட்டங்களையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது அவசியமாகிறது. அந்த வகையில், உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த SPR சிட்டியின் பிரமாண்டக் கொலு, சென்னையின் கலாசாரப் பெருமையைப் பறைசாற்றும் முயற்சியாக அமைந்துள்ளது.