பெரியார் அறிவுலகம் நூல் சர்ச்சை: கமல்ஹாசன் காட்டம்|‘No Greater Disgrace to Tamil’: Kamal Haasan Slams Book Scam

Spread the love

கடந்த மாதம் கோவையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் இடம்பெற்றிருக்கும் புத்தகங்களில் ஊழல் நடந்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகத்திலிருந்து நூலகத்திற்கு அதிக விலையில் புத்தகங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. அந்தப் புத்தகங்களில் உண்மைக்கு முரணான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதை ஒரு கட்டுரை மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் பெருமாள் முருகன்.

இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நடிகர் கமல்ஹாசன், “தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.

கமல்ஹாசன் பதிவு

கமல்ஹாசன் பதிவு

இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும்.

இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.

இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களிலிருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும்.

மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *