பெரியார் நூலக விவகாரம்: ‘அந்தப் புத்தகங்கள் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டது அல்ல.!’- சேகர்பாபு|sekar babu about periyar library issue

Spread the love

இந்த விவகாரம் அரசியல் ரீதியாகப் பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” பெரியார் நூலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகங்கள் எல்லாம் திமுக ஆட்சியில் வாங்கப்பட்டவை அல்ல.

ஜூன் மாதத்தில் முத்திரையிடப்பட்ட புத்தகங்கள் அந்த நூலகத்தில் இருக்கின்றன. ஜூன் மாதத்தில் யாருடைய ஆட்சி நடைபெற்றது. தவெகவின் ஆட்சிதான் நடைபெற்றது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பல புத்தகங்கள் அந்த நூலகத்திற்கு வாங்கியதை சமூக ஆர்வலர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஆகவே முழுமையான உண்மை வந்த பிறகு மக்களுக்கு இது குறித்து தெரிய வரும்.

எங்களுடைய ஆட்சிக் காலத்தில் எங்கள் முதல்வர் படி படி என்று சொன்னாரே தவிர விசுவல் வாரியர்ஸை போல தவறு செய்துவிட்டு திருந்துங்கள் என்று சொல்ல மாட்டார். படி படி என்று சொல்லக்கூடியவர் எங்கள் முதல்வர். இன்றைய முதல்வர் குடி குடி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *