இந்தத் தேர்தலில் தோல்வியை ஃபிளாவியோ போல்சோனாரோவால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
அதனால், தேர்தல் தினத்தன்று பிரேசில் உச்ச நீதிமன்றம் வாக்கு நேரத்தை இரண்டு மணிநேரம் அதிகப்படுத்தியதைச் சட்டத்திற்குப் புறம்பானது என்று ஃபிளாவியோ போல்சோனாரோ குற்றம் சாட்டுகிறார்.
கடந்த 25-ம் தேதி, பிரேசில் தேர்தலின் போது, ‘போக்குவரத்து எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், பல வாக்காளர்கள் வாக்களிக்க வர முடியவில்லை’ என்று லுலா தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தது. இன்னொரு காரணமாக, அந்த நாளில் பிரேசிலில் மழை பெரிய அளவில் இருந்ததாலும் பலரால் வாக்களிக்க வர முடியவில்லை.
இதைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் வாக்களிக்கும் நேரத்தை இரண்டு மணிநேரம் நீட்டித்தது.
இதைத் தான் ஃபிளாவியோ போல்சோனாரோ சட்டத்திற்குப் புறம்பானது என்றும், இது லுலாவிற்குச் சாதகமாக அமைந்துவிட்டது என்றும் கூறுகிறார்.

நேற்றுக்கூட (அக்டோபர் 28), ‘நான் தான் பிரேசிலின் அதிபர்’ என்று அறிவித்துக்கொண்டு லுலா அரசு தேர்தலில் வெற்றிபெற அரசியல் முறைகேடுகளைச் செய்தது என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஃபிளாவியோ போல்சோனாரோ.
ஆனால், இந்த அறிக்கையை அமெரிக்காவில்தான் வெளியிட்டிருக்கிறார் என்பதுதான் ட்விஸ்ட்.
போல்சோனாரோ மீது ஊழல், மோசடி போன்ற புகார்கள் உள்ளன. இதனால், அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று முன்பு உத்தரவிடப்பட்டிருந்தது.