பெரியார் பெருந்தொண்டர் ‘விடுதலை’ சம்பந்தம் மனைவி கமலா காலமானார்! | Kamala Ammayar, Wife of Periyar Aide N.S. Sambandam, Passes Away at 97

Spread the love

சம்பந்தம்- கமலா தம்பதிக்கு நான்கு பெண் பிள்ளைகள். கலைச்செல்வி, தேன்மொழி, மணிமேகலை, மங்கையர்கரசி.

“சம்பந்தம் மீது பெரியாருக்கு பெரிய நம்பிக்கை. அதனால்தான் விடுதலையின் மேனேஜராக அவனை நியமித்தார். பெரியார் திடல் இடத்தை வாங்கிய பிறகும் கூட அதை வளப்படுத்துவதற்கு சில கட்டடங்களை எல்லாம் கட்டுவதற்கு சம்பந்தத்தையும் அவரது தம்பி ஏகாம்பரத்தையும் வைத்தே செய்தார். எமர்ஜென்ஸியின் போது சம்பந்தத்தை ஜெயிலில் போட்டுவிட்டார்கள். அது காலவரம்பற்ற சிறை. எப்போது விடுதலை என்றே தெரியாது. அவனுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு, அவனது மனைவி. அந்த அம்மையார் ரொம்பவே தைரியமாக இருந்தார்கள். அது பாராட்டப்பட வேண்டிய செயல். ஜெயிலில் அவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது, எழுந்து அமர முடியாத நிலை. மருத்துவர்கள் அவனுக்கு ஒரு பெல்ட் கொடுத்தார்கள். அதை அவனது மனைவி ஜெயிலில் கொண்டு போய் கொடுத்தார். ஆனால் ஜெயில் அதிகாரிகள் கொடுக்கவிடவில்லை” என்று 8.10.86-ல் பெரியார் திடலில் நடந்த சம்பந்தம்-கமலா மணிவிழாவில் பேசினார் முன்னாள் அமைச்சர் ராஜாராம்.

கமலா திருமணத்துக்குப் பிறகு திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டார். 1976-ல் சம்பந்தம் சிறையில் இருந்தபோது கமலா விடுதலை இதழின் மேலாளராக பொறுப்பேற்று பணியாற்றினார்.

பெரியார் மணியம்மையாரைத் திருமணம் செய்துகொண்ட போது கழகத்தின் முன்னணி தோழர்கள் பலர் பெரியாரிடமிருந்து விலகினர். அந்த நெருக்கடியான நேரத்தில் சம்பந்தம் பெரியாருக்கு பக்கபலமாக நின்றார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 31.08.1974-ல் வெள்ளி விழா கண்ட சம்பந்தம்-கமலா தம்பதிக்கு தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அளித்தார் மணியம்மையார்.

பெரியார் அண்ணா.

பெரியார் அண்ணா.

இறுதிவரை கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்ற சம்பந்தம் 01.02.1993 அன்று இயற்கையில் கலந்தார். அதன்பிறகு மகள்களின் பராமரிப்பில் இருந்தார் கமலா.

“சிலநாள்களுக்குமுன் எங்கள் அக்காவை அழைத்து, நான் காலமானால் எந்த சடங்கும் செய்யக்கூடாது என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார். இறுதி நாள் வரையும்கூட முரசொலி வாசித்தார். சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்ததை தாங்கமுடியாமல் கலங்கினார். ‘உடம்பு நல்லாயிருந்தா அந்தத் தம்பியைப் பாத்து ஒரு வார்த்தை ஆறுதல் சொல்லியிருக்கலாம்’ என்று வருந்தினார். அவருக்கிருந்த பெரிய வருத்தம், ஸ்டாலினைச் சந்தித்து இரண்டு வார்த்தை பேசமுடியாதது தான்…” என்கிறார்கள், மகள்கள் மங்கையர்கரசியும் மணிமேகலையும்.

கமலாவின் முகவரி : கதவு எண் 5, காவேரி அபார்ட்மெண்ட், பகவந்தம் தெரு, தி.நகர், சென்னை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *