பெருந்துறை:தாலிக்கொடிக்காக இளம்பெண் துடிதுடிக்க கொலை! செவிலியர் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம் -tiruppur nurse murder case jwel theft shoking update.

Spread the love

திருப்பூர் மாவட்டம் பல்லக்கவுண்டன் பாளையத்தில் வசித்து வந்த செவிலியர் உத்ரா பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 14- ம்‌ தேதி மாலை திடீரென காணாமல் போனார். பணியை முடித்து விட்டு உத்ரா வீடு திரும்பாததால் பதறிய கணவர் ரஞ்சித், ஊத்துக்குளி காவல்நிலையத்தில் அன்றைய தினமே புகார் அளித்திருந்தார்.

உத்ராவை தேடி வந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, விஜயமங்கலம் டோல்கேட் அருகில் உள்ள பொன் கைலாஷ் நகர் செல்லும் வழியில் ஒரு காட்டில், இளம்பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் அழுகிக் கிடப்பதாக, பெருந்துறை காவல்துறையினருக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற காவல்துறையினர், அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர். அருகில் கிடந்த உடைகள் மற்றும் காலணிகளை வைத்து உத்ராவின் உடல் என்பதை உறுதி செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *