பாஜகவில் போட்டியிட விருப்பம்.. உடனே கொலை குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்திய அலகாபாத் ஹைகோர்ட் | Allahabad High Court pauses life sentences of Murder convict who wants to fight BJP ticket in Uttar Pradesh Assembly election

Spread the love

India

oi-Nantha Kumar R

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த கொலை குற்றவாளியின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் பிரமோத் குமார் நிகம். இவர் தேசிய சாலை வியாபாரிகள் சங்கத்தின் நிறுவன செயலாளராக இருந்தார்.

அதுமட்டுமின்றி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்த ராம் ஜென்மபூமி இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

Allahabad High Court

சுட்டுக்கொலை

பிரமோத் குமார் நிகம் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில் அரசியல்வாதியாகவும், தாதாவாகவும் வலம் வந்த முக்தார் அன்சாரி (இப்போது இறந்துவிட்டார்) கும்பல் தான் அவரை கொன்றது.

கொலையின் பின்னணி

இதுதொடர்பாக சிக்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிரமோத் குமார் நிகம் என்பவருக்கும் அரசியல்வாதியும், தாதாவான முக்தார் அன்சாரியின் ஆதரவாளரான நந்த்லால் ராய் என்ற பப்லு ராய் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தகராறில் , மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரமோத் குமார் நிகமிற்க நந்த்லால் ராய் மிரட்டலும் விடுத்தார்.

அதன்பிறகு அடுத்த சில மணிநேரங்களில் பிரமோத் குமார் நிகம் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்..
சேஷ்நாத் சர்மா என்பவர் தான் பிரமோத் குமார் நிகமை சுட்டு கொன்றார். இதன் பின்னணியில் நந்த்லால் ராய் இருப்பதாக கூறப்பட்டது.

நந்த்லால் ராய்க்கு ஆயுள் தண்டனை

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த வாரணாசி செசன்ஸ் நீதிமன்றம் சேஷ்நாத் சர்மா மற்றும் நந்த்லால் ராய் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. இந்த தண்டனை கடந்த 2025ம் ஆண்டில் வழங்கப்பட்டது. ஆயுள் தண்டனையை தொடர்ந்து நந்த்லால் ராய் சிறையில் அடைக்கப்பட்டார்.

தண்டனையை நிறுத்தி வைத்த ஹைகோர்ட்

இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நந்த்லால் பாஜக சார்பில் அல்லது சுயேச்சை வேட்பாளராக போட்டியிட விரும்புகிறார். இதனால் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது ஆயுள் தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று நந்த்லால் ராய் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ”கொலை வழக்கு தொடர்பான எஃப்ஐஆர்-ரில் எனது பெயர் சேர்க்கப்படவில்லை. 17 நாட்களுக்கு பிறகு தான் நான் இந்த கொலையில் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டது. அதுவும் யூகத்தின் அடிப்படையில் தான் என்னை தொடர்புப்படுத்தி .ள்ளனர். இப்போது சட்டசபை தேர்தலில் பாஜக டிக்கெட் அல்லது சுயேச்சையாக போட்டியிட விரும்புகிறேன். இதனால் எனது தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சித்தார்த், வினய் குமார் திவேதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், ”சாதாரண மனிதனின் வாழ்வாதார உரிமை போன்றது தான் ஒரு அரசியல்வாதி தேர்தலில் போட்டியிடுவதற்கான உரிமையும் உள்ளது. எனவே மேல்முறையீட்டாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதுமட்டுமின்றி நந்த்லால் ராய்-யின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்த உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *