‘பெரும் மனநிறைவை கொடுத்த படம்’- ‘டோரதி’ படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ் | A Film That Gave Me Immense Satisfaction Mari Selvaraj Praises ‘Dorothy’

Spread the love

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் “டோரதி’ திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

‘டோரதி’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் ‘டோரதி’ படத்தை பாராட்டி இருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” இன்று டோரதி பார்த்தேன். ரொம்ப தாமதம் தான். ஆனாலும் பெரும் மனநிறைவை கொடுத்த படம்.

எப்படியாப்பட்ட மனிதர்களின் கதைகள் படமாக்கப்படவேண்டும் என்று பெரும் விருப்பத்தோடு இருக்கிறோமோ அப்படியாப்பட்ட மனிதர்களின் கதையும் அழுகையும் ஆசைகளும் விருப்பங்களும் துரோகங்களும் கனவுகளும் நம்பிக்கைகளும் அப்பட்டமாய் படம் பிடிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி.

இந்த மகிழ்ச்சிக்கு காரணமான கார்த்திக் சுப்புராஜிற்கும் அதை பெரும் தூணாக நின்று சாத்தியபடுத்திக் கொடுத்த நம் ராஜாவின் இசைக்கும், மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகளும் அன்பும்” என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *