Messi: கண்ணீருடன் முடிவுக்கு வந்த பயணம்.. பேர்வெல் போட்டியில் மெஸ்ஸி சொன்ன எமோஷனல் மொமண்ட்! | Lionel Messi: Football Legend Lionel Messi bids a tearful farewell to Argentina after 3-0 win over Benin

Spread the love

Sports

oi-Yogeshwaran Moorthi

மும்பை: சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி ஓய்வு பெற்றுள்ளார். கடைசி ஆட்டத்தில் மெஸ்ஸி ஒரு கோல் மற்றும் 2 அசிஸ்ட்டுகளை செய்தார். அதுமட்டுமல்லாமல் மெஸ்ஸிக்கு மரியாதை அளிக்கும் வகையில் ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் போட்டி ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டது. அது ரசிகர்களுக்கு எமோஷனல் மொமண்ட்டாக அமைந்தது.

ஃபிஃபா உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியிடம் அர்ஜென்டினா அணி அடைந்த தோல்விக்கு பின், நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஓய்வை அறிவித்தார். அதன்படி நேற்றிரவு அர்ஜென்டினா அணிக்காக கடைசி போட்டியில் மெஸ்ஸி ஆடினார். பெனின் அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Lionel Messi

இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஒரு கோல் மற்றும் 2 அசிக்ஸ்ட்டுகளை செய்து அசத்தினார். சர்வதேச கால்பந்து விளையாட்டில் மெஸ்ஸியின் கடைசி கோலாக இது அமைந்தது. அர்ஜென்டினா அணிக்காக மொத்தமாக 126 கோல்கள், 67 அசிஸ்ட்டுகளை மெஸ்ஸி செய்துள்ளார். அதேபோல் ஃபிஃபா உலகக்கோப்பை, 2 கோபா அமெரிக்கா கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

மெஸ்ஸியின் தலைமையில் அர்ஜென்டினா அணி 3 முறை ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இவையனைத்தும் நேற்றைய ஆட்டத்தின் போது மெஸ்ஸியின் ரசிகர்களுக்கு கண் முன் தோன்றி இருக்கும். பெனின் அணிக்கு எதிரான போட்டியின் போது 10வது நிமிடத்தில் மெஸ்ஸிக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இது அர்ஜென்டினா ரசிகர்களுக்கு எமோஷனலான நேரமாக அமைந்தது. இதன்பின் ஆட்டம் நிறைவடைந்த போது மெஸ்ஸி பெனால்டி ஷாட் அடித்த இடத்தின் புற்கள் அப்படியே ஒரு கவரில் போடப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல் கடையாக அவர் அடித்த கோல் மற்றும் கொண்டாட்டம் ஒரு கவிதையாக அமைந்தது.

இதன்பின் இறுதியாக மெஸ்ஸி பேசுகையில், என் கால்பந்து வாழ்க்கையின் சோகமான நாள் இதுதான். அர்ஜென்டினாவில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன். என் கனவை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டு ஓடியதற்கு பெருமை கொள்கிறேன். இனி நான் ரசிகர்களில் ஒருவராக இருந்து அர்ஜென்டினா அணிக்கு என்றும் ஆதரவு கொடுப்பேன்.

நிச்சயமாக அனைவரிடமும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். வாழ்க்கை முழுக்க அர்ஜென்டினா அணியுடன் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் கடந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது. உலகக்கோப்பை தொடரின் போது ஏராளமான கட்டுக்கதைகள் உருவாக்கப்பட்டது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போதே எங்களின் அத்தனை உழைப்பையும் கொடுத்துவிட்டோம். இருப்பினும் என் கனவை எட்டி பிடிப்பதற்கு அர்ஜென்டினா வீரர்கள் அனைவரும் உடனிருந்தனர். என்னால் அர்ஜென்டினா அணி வெல்லவில்லை. வீரர்களின் உழைப்பால் மட்டுமே வென்றது. என்ன நடந்தாலும், அடுத்த தலைமுறைக்கு ஆதரவாக நான் மைதானத்தில் நிற்பேன்.

அனைவரும் ஒற்றுமையாக இருந்து அர்ஜென்டினா அணியை முன்னேற்றுவோம். நாம் ஒற்றுமையாக இருப்பதே அணிக்கு பலம். சிலருக்கு நாம் வெல்வது பிடிக்காது. அந்த எண்ணத்தை நமது ஒற்றுமையின் மூலமாக தகர்ப்போம். நான் கொஞ்சம் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறேன் என்று புரிகிறது. சில விஷயங்களை விட்டிருக்கலாம். இந்த நொடி முதல் நான் ரசிகர்களில் ஒருவனாக இருப்பேன் என்று தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *