முன்னதாக, ஒரு ஐபிஎல் அணி, கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடுவதை விட்டுவிட்டு, தங்களது உலகளாவிய டி20 லீக் அணிகளுக்காக விளையாட முன்வந்தால், அவருக்கு 10 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (சுமார் 6.6 மில்லியன் அமெரிக்க டாலர்) வரை வழங்க தயாராக இருப்பதாக செய்திகள் வெளியானது. இத்தகைய சூழலில்தான், தங்கள் கேப்டனை தக்கவைக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் ஜேம்ஸ் ஆல்சாப் கூறுகையில், “நிச்சயமாக, ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர்கள் நீண்ட கால பாதுகாப்பு மற்றும் சிறந்த ஊதியத்திற்கு தகுதியானவர்கள். அவர்கள் நீண்ட காலமாக அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்டு அந்த உரிமையை சம்பாதித்துள்ளனர். பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் போன்ற பல வடிவங்களில் விளையாடும் வீரர்களுக்கு சந்தையில் அதிக தேவை உள்ளது. எனவே, அவர்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பதை உறுதி செய்வது எங்கள் மிகப்பெரிய முன்னுரிமை,” என்று குறிப்பிட்டார்.

பேட் கம்மின்ஸ் தற்போது ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். புதன்கிழமை பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், ஹைதராபாத் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். போட்டிக்குப் பிறகு பேசிய அவர், “பஞ்சாப் ஒரு சிறந்த அணி. அவர்களுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் நல்ல ஸ்கோரை எட்டியது அருமையாக இருந்தது. பந்துவீச்சிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றோம்” என்று தனது அணியின் செயல்பாட்டை பாராட்டினார்.