இன்றிலிருந்தே தொடங்கலாம் — 7 எளிய வழிகள்
1. தினமும் 30 நிமிடம் எழுதும் நேரம் — நாள் diary, சிறு கதை, படம் பற்றி வர்ணிப்பு — எதுவாக இருந்தாலும், பழக்கம் உருவாகட்டும்.
2. Phone-free மேசை — சாப்பிடும், படிக்கும் மேசையில் phone வேண்டாம். இது வீட்டு விதி ஆகட்டும்.
3. “Homework இல்லை” என்றாலும் “நான்கு வரி எழுது” — எழுதும் பழக்கம் வீட்டிலிருந்து வரட்டும்.
4. Screen Time வரம்பு — 6 வயதுக்கு மேல் நாளில் 2 மணி நேரம் மட்டுமே. அதுவும் quality content-க்காக மட்டும். இது கொடுமை அல்ல — அன்பு.
5. சேர்ந்து எழுதுங்கள் — “நீ மட்டும் போ” என்று சொல்வதை விட, “நாம் இருவரும் சேர்ந்து எழுதுவோம்” என்று உட்காருங்கள்.
6. வீட்டில் புத்தகங்கள் வையுங்கள் — Comics ஆக இருந்தாலும் சரி. படிக்கும் குழந்தை எழுதவும் கற்றுக்கொள்கிறது.
7. பாராட்டுங்கள் — கையெழுத்து அழகில்லாவிட்டாலும், “நீ முயற்சி செய்தாய், அது மிகவும் நல்லது” என்று சொல்லுங்கள். ஊக்கம் கொடுப்பது திருத்துவதை விட ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்தது.
பெற்றோரே – இறுதியில் ஒரு வார்த்தை
உங்கள் குழந்தை இப்போது எழுதத் திணறுகிறது என்றால் — அவர்களை குறை சொல்லாதீர்கள். அவர்கள் சோம்பேறியில்லை, முட்டாள்களில்லை. அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பயிற்சி கிடைக்கவில்லை. அவ்வளவுதான். தெரிந்துவிட்டது. இப்போது மாற்றம் செய்யலாம்.
ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் — குழந்தையோடு உட்காருங்கள். Phone கீழே வையுங்கள். பென்சில் கொடுங்கள். எழுதட்டும். பாருங்கள்.
சில மாதங்களில் மாற்றம் தெரியும். நான் உறுதியாக சொல்கிறேன்.
ஏனென்றால் உங்கள் குழந்தையின் எதிர்காலம் — இன்று உங்கள் கையில் இருக்கிறது.
ஆலன் ஜோசப்,
மனநல ஆலோசகர்