இதற்கு, ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விளக்கம் “தவெக 108, காங்கிரஸ் 5 என 113 இடங்கள் என்று குறிப்பிட்டு கடிதம் அளித்தனர். 113 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே என்று உறுதியாக அவர்களே தெரிவித்த பிறகு எப்படி ஆட்சி அமைக்க அழைக்க முடியும், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் அவர்கள் உரிமை கோரவில்லை” என்பது. ஆனால், பெரும்பான்மையை சட்டப்பேரவையில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, ஆளுநர் மாளிகையில் அல்ல என்று உச்ச நீதிமன்றம் அறுதியிட்டு கூறியுள்ளதை நாம் அறிவோம்.

சிபிஐ(எம்) முன்னால் இருந்த மூன்று வாய்ப்புகள்:
இத்தகைய சூழ்நிலையில் சிபிஐ(எம்)-க்கு முன்னால் மூன்று வாய்ப்புகள் இருந்தன.
1. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது.
2. திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது.
3. எவரும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்கவில்லை என்றால் குடியரசு தலைவர் ஆட்சி அமையும். இல்லையென்றால் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்வது.
மேற்குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர வேறு வாய்ப்புகள் எதுவுமில்லை. மேற்கண்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு விவாதித்தது.