International
oi-Velmurugan P
காத்மாண்டு: நேபாள-சீன எல்லையில் அமைந்துள்ள ரசுவாகதி-கேருங் பகுதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு குறித்து சீனா முன்னெச்சரிக்கை விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தக் கூற்றுக்கள் தவறானவை என்றும் மக்களை திசைதிருப்பக் கூடியவை என்றும் சீனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது
சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், நேபாளத்தில் பரப்பப்படும் இரண்டு முக்கியக் குற்றச்சாட்டுகளை “போலிச் செய்தி” என்று கூறி திட்டவட்டமாக நிராகரித்துள்ளது:

சீனத் தரப்பிலிருந்து எச்சரிக்கை வராததால் நேபாளத்தில் அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்று சீன தூதரகம் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
சீனப் பகுதியில் ஏற்பட்ட புவியியல் பேரிடரால் உருவான அணை உடைந்ததால் நேபாளத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது என்று நேபாளம் வைத்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்றும் சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
சீனத் தரப்பின் விளக்கம் என்ன
நேபாளம் கூறிய அனைத்து
குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள சீனத் தரப்பு, நடந்த நிகழ்வுகளின் உண்மை பின்னணி வேறு என்று கூறியுள்ளது.
ஆகஸ்ட் 26, 2026 அன்று காலை நேபாளப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அல்லது நிலநடுக்கம் போன்ற அதிர்வினால் தான் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த பிரம்மாண்ட நிலச்சரிவு காரணமாகவே ரசுவாகதி-கேருங் எல்லைப் பகுதியின் நேபாள மற்றும் சீன ஆகிய இரு தரப்பிலும் பெரும் உயிர்ச்சேதமும், மனிதர்கள் மாயமாகும் சம்பவங்களும் நிகழ்ந்தன.
இத்தகைய உணர்வுப்பூர்வமான சூழ்நிலையில் இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதை விடுத்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
“பரஸ்பரம் குற்றம் சாட்டுவது எதற்கும் தீர்வாகாது; ஒத்துழைப்பே உயிர்களைக் காப்பாற்றும்” என்றும் சீனத் தூதரகம் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.