“பேராசிரியர் கலையரசனை அதிகாலையில் கைதுசெய்ய முதல்வர் சொல்லியிருக்கமாட்டார்” – திருமாவளவன் விளக்கம் | Thirumavalavan an explanation regarding the arrest of Kalaiyarasan.

Spread the love

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “பேராசிரியர் கலையரசன் விடியற்காலை 5 மணிக்குக் கைதுசெய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அது ஏற்புடையதல்ல. தமிழ்நாடு அரசின் வெள்ளை அறிக்கை குறித்து நடுநிலையோடு நின்று நெடிய கட்டுரையைத் தந்த ஒரு முக்கிய ஆளுமையை காவல்துறை இவ்வாறு நடத்தியிருப்பது ஜனநாயக சக்திகளைக் காயப்படுத்தும் செயல். விசிக சார்பாக இந்த நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவதூறாக எழுதியதாகக் கூறித்தான் கலையரசனை காவல்துறை கைதுசெய்தது.

ஆனால், கலையரசனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி யாரோ உருவாக்கிய போலி ஐ.டி மூலமே அந்தப் பதிவு வெளியிடப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த உண்மை வெளிவந்த பிறகு காவல்துறை அவரை விடுவித்துள்ளது. அதிகாலை 5 மணிக்குச் சென்று கைதுசெய்யுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டிருக்க வாய்ப்பில்லை. கைது நடவடிக்கையின்போது கூட்டம் கூடிவிடக் கூடாது என்பதற்காகக் காவல்துறையே தங்களது செயல்பாட்டு முறையின்படி இந்த நேரத்தைத் தேர்வு செய்திருக்கலாம். இருப்பினும் இத்தகைய அதிகாலைக் கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *