பைக் மீது கார் மோதல்! தூக்கி வீசப்பட்ட 57 வயது முதியவர் பலி! தென்காசியில் பதைபதைக்கும் விபத்து! | 57 years old man killed as car clashes with his bike in Tenkasi

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

தென்காசி: தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 57 வயது முதியவர் உயிரிழந்துவிட்டார். அவர் இறந்தது குறித்து பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே உள்ள திருவேட்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனித்துரை (57). இவர் நேற்று திருவேட்டநல்லூர் பகுதியில் இருந்து புளியங்குடி நோக்கி கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

tenkasi accident

அப்போது புன்னையாபுரம் அருகே சென்றபோது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் சீனித்துரை தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சீனித்துரை உயிரிழந்தார்.

இதற்கிடையே, கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வீடியோவில் சீனித்துரை தனது இரு சக்கர வாகனத்தில் வலது புறமாக திரும்புகிறார். அப்போது அவர் திரும்பிய கொஞ்ச தூரத்தில் இடது புற சாலையை பயன்படுத்த வேண்டிய கார் ஒன்று, வலது புறமாக எதிர்திசையில் வந்து கொண்டிருக்கிறது. உடனே சீனித்துரை இடது புறமாக செல்ல முயல்வதற்குள் அந்த கார், பைக் மீது மோதியது. இதில் சீனித்துரை தூக்கி வீசப்பட்டார். அவரது இரு சக்கர வாகனமும் காரின் முன்பகுதியில் மாற்றிக் கொண்டது. சீனித்துரையோ காரின் உயரத்தை விட கூடுதல் உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டார்.

இதையடுத்து அந்த காரில் வந்தவர்கள் காரின் முன்புறம் இருந்த பைக்கை எடுக்கிறார்கள். இந்த விபத்தில் கார் சேதமடைந்தது. முன்பக்க கண்ணாடி உடைந்துவிட்டது. இந்த வீடியோ காட்சியில் சீனித்துரை தூக்கி வீசப்படும் காட்சியை பார்க்கும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *