`பொதுச் செயலாளர் பதவியை அவருக்காக வைத்திருக்கிறோம்!’ – புதிய கட்சியைத் தொடங்கிய அஜித் ரசிகர்கள்

Spread the love

திரைப்பட நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றியிருக்கிறார். சினிமாவில் நடிகர் விஜய், அஜித் மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் நேரெதிர் துருவங்களாக இருந்தது அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் சமீபத்தில் லண்டன் சென்ற முதல்வர் விஜய், நடிகர் அஜீத்குமாரின் கார் ரேஸை துவக்கி வைத்ததும், அவரைக் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டியதும் தமிழகத்தில் பேசுபொருளானது. அதேசமயம் அந்தச் சம்பவம் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேர எழுப்பியது. இந்த நிலையில்தான் கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை பகுதியில் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் ஒன்றிணைந்து, `தமிழக மக்கள் கழகம்” என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கின்றனர்.

தமிழக மக்கள் கழகம் கொடி அறிமுகம்

தமிழக மக்கள் கழகம் கொடி அறிமுகம்

மஞ்சள், வெள்ளை, சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்கள் கொண்ட இந்தக் கட்சியின் கொடியில் நடுவில் இரண்டு சிறுத்தைகள் இடம் பெற்றுள்ளன. கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில தலைவராக ஆபித், மாநிலச் செயலாளராக ராம்குமார், மாநிலப் பொருளாளராக முகமது ஷா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அஜித் ரசிகர்களும் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாநிலத் தலைவர் ஆபித் அவர்களிடம் பேசியபோது, “தமிழகத்தில் 38 மாவட்டங்களில் இருக்கும் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் அஜீத் அவர்களின் 5 லட்சம் ரசிகர்கள் ஒன்றிணைந்து, இந்தக் கட்சியை தொடங்கியிருக்கிறோம். எங்களுக்குப் பிறகு அல்டிமேட் சூப்பர் ஸ்டார் அஜீத் அவர்களின் பெயரைப் பயன்படுத்தி, இரண்டாவது, மூன்றாவது கட்சிகளை ஆரம்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *