பொறுப்பும் கொடுக்கவில்லை… மரியாதையும் அளிக்கவில்லை! – தவெகவில் இணைந்த அதிமுக மாஜிக்கள் புலம்பல் | The former admk cadres joined in tvk are in upset

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு, அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தற்போதைய சில சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்தனர். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற இரண்டு கட்ட இணைப்பு நிகழ்ச்சிகளில், மொத்தம் 8 முன்னாள் அமைச்சர்கள், ஒரு முன்னாள் எம்.பி., பல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 7 தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இணைந்தனர்.

முதல் கட்டமாக, முன்னாள் அமைச்சர்கள் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி, முன்னாள் எம்.பி. இளவரசன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜ், ராஜமுத்து, ராஜவர்மன், பன்னீர்செல்வம், முருகன், என். சிவா உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். பின்னர் இரண்டாம் கட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ். வளர்மதி, எம்.எஸ்.எம். ஆனந்தன் உள்ளிட்டோரும் கட்சியில் இணைந்தனர்.

 பனையூர் | தவெக அலுவலகம்

பனையூர் | தவெக அலுவலகம்

இவர்களில் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல் உள்ளிட்ட 7 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அவர்களுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என கட்சித் தலைமை உறுதியளித்துள்ளதாக கூறப்படுவதால், அந்தத் தரப்பில் பெரிதாக அதிருப்தி இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் நிலை வேறுபட்டதாக இருப்பதாக கூறப்படுகிறது. கட்சியில் இணைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும், மாவட்டம், மண்டலம் அல்லது மாநில அளவிலான எந்தவொரு பொறுப்பும் அவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. மேலும், முக்கிய நிகழ்ச்சிகள், ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் நிர்வாகச் சந்திப்புகளிலும் அவர்களுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *